கொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’!

Published:

corona virus alert - 2026

ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்ரல். 3 ல் அனுமதிக்கப்பட்ட 75 வயது முதியவர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருந்தது தற்போது உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த அவர், துபாயில் இருந்து திரும்பியவர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 2.500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் 25-ஆம் தேதி மதுரையில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார். அதுதான் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட முதல் உயிரிழப்பு. தொடர்ந்து விழுப்புரம் மற்றும் தேனி மாவட்டத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். தற்போது, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.3 ஆம் தேதி அனுமதிக்கப் பட்ட 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் கொரோனோவுக்கு தமிழகத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img