உலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்!

உலகம் சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
wuhan corona virus - 2026

உலகம் முழுக்க 12,01,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க ஏப்.4ம் தேதி வரை 64,691 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிர்ச்சி தரத்தக்க வகையில், ஒரே நாளில் அமெரிக்காவில் 1,048 பேரும், பிரான்சில் 1,053 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் 3,11,357 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதுவரை அமெரிக்கவில் மட்டும் 8,452 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, நேற்று ஒரே நாளில் 1,048 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ஏப்.3ஆம் தேதி, 1480 பேர் ‘கொரோனா’ பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஏப்.4 ஆம் தேதி நேற்றும் 1,048 பேர் உயிரிழந்தது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

மேலும், நேற்று ஒரே நாளில் 34,196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 3,11,357 ஆக அதிகரித்தது. இந்நிலையில், ‘அடுத்த 10 நாட்களில் பாதிப்பு உச்சத்தை எட்டும்’ என வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புக் குழு தெரிவித்துள்ளது.

corona alert - 2026

அதேபோல், பிரான்சில் 1,053 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடான பிரான்சில் நேற்று ஒரே நாளில் 1,053 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்தது. 1 லட்சத்து 26 ஆயிரத்து 168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின்: 1,26,168 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 11,947 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான்: 55,743 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,452 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து (யு.கே): 41,903 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4,313 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி: 23,934 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 501 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவிஸ்: 20,505 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 666 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.