ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல்; கவுன்சிலர் சையத் ஜஹீர் கைது!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
ahsa attack muslim councilar - 2026

தெலங்காணாவில் ஆஷா ஹெல்த் ஊழியர்கள் மேல் தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றன. அண்மையில் அதிலாபாத் மாவட்டத்தில் ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் மறப்பதற்கு முன்பே இன்று நிர்மல் மாவட்டத்தில் ஆஷா ஊழியர்கள் மீது ஒரு முஸ்லிம் கவுன்சிலர் தாக்குதலில் இறங்கினார்.

நிர்மல் மாவட்டத்தில் மர்கஜ் சென்று வந்தவர்களின் விவரங்களை சேகரிப்பதற்காக சென்று சர்வே நடத்தி வரும் ஆஷா ஊழியர்களை கபூதர் கமான் என்ற ஏரியாவின் கவுன்சிலர் தடுத்து, “நாங்கள் எப்படிப்பட்ட விவரங்களையும் கொடுக்க மாட்டோம். இங்கிருந்து போய் விடுங்கள்” என்று மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி தன் அதிகார பலத்தையும் காட்டும் முயற்சியில் இறங்கினார். அவருடைய நடவடிக்கையை பார்த்து ஆஷா ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தார்கள். அதனால் உடனே அங்கு வந்த போலீசார் அந்த முஸ்லிம் கவுன்சிலரை கைது செய்தனர்.

ஆனால் ஏஎன்எம் களும் ஆஷா ஊழியர்களும் தமக்கு பாதுகாப்பு அளித்தால் தான் தங்களால் பணி செய்ய முடியும் என்று மாவட்ட மையத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் இறங்கினார்கள்.

நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் நகர், கபூதர் கமான் காலனியில் ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதலில் இறங்கியதால் தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சர்வேக்கு போக மாட்டோம் என்றும் ஆஷா ஊழியர்கள் கூறினார்கள் .

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

அந்த முஸ்லிம் கவுன்சிலரின் நடவடிக்கை மீது தீவிர அதிருப்தி வெளிப்படுத்தினார்கள். இந்த கவுன்சிலர் நடந்துகொண்ட விதத்தை விவரித்து அவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

நிர்மல் மாவட்டத்தில் இருந்து சுமார் 52 பேர் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மதப் பிரச்சார சபையில் பங்கு கொண்டு திரும்பினார்கள். இரண்டு நாட்கள் முன்பு அவர்களில் ஒருவர் இறந்து போனார்.

ஆனால் அந்த ஏரியாவில் சர்வே நடத்துவதற்காக சென்றபோது உள்ளூர் கவுன்சிலர் அவர்களை தடுத்து தாக்கத் தொடங்கினார் என்று தெரிவித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.