ஹெல்மெட்டில் இருந்து ‘மாஸ்க்’குக்கு மாறியது… போலீஸாரின் ‘கழுகு’ப் பார்வை!

சற்றுமுன் மதுரை
police in madurai

மதுரையில் போலீஸாரின் பார்வை ஹெல்மெட்டிலிருந்து மாஸ்க்குக்கு மாறியிருக்கிறது.

மதுரை நகரில் போலீஸார் கொரோனா காலத்திலும் ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு தொடர்ந்து அபாராதம் விதித்து வந்தனர். இந்த நிலையில் சமூக இணையதளங்களில் பலர் போலீஸார், இந்தக் காலக்கட்டத்தில் ஹெல்மெட் அணியச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர் .அதை விட இந்த நேரத்தில் மாஸ்க் அணியச் சொல்லாம் என கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் புதன்கிழமை மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசணையின் பேரில் மாஸ்க் அணியாமல் சாலையில் நடமாடிய 500 பேரை மடக்கிப் பிடித்து ரூ. 59 ஆயிரத்து 800 அபாராதமாக வசூலித்துள்ளனர்.

மதுரை புறநகர் மாவட்டத்தில் உள்ள சமயநல்லூர், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, சோழவந்தான், தென்கரை, கருப்பட்டி, வாடிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் இன்னமும் பலர் மாஸ்க் அணிய தயக்கம் காட்டி வருகின்றனராம். இவர்களையும் போலீஸார் மாஸ்க் அணிய ஆலோசனை வழங்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  • செய்தி : ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.