எச்.ராஜாவுக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டதற்கு, அவ்வாறு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹெச்.ராஜா மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையீடு செய்த 3 வழக்கறிஞர்களிடம் பதில் அளித்துள்ளது உயர் நீதிமன்றம்.
இதில், முகாந்திரம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று நீதிபதி கூறினார்.
மேலும், வழக்கறிஞர்களாக முன்வந்து, இது நீதிமன்ற அவமதிப்பு என்று கோரி, ஒரு மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.
மேலும், நீதிமன்றத்தில் முறையீடு செய்த 3 வழக்கறிஞர்களிடமும், இது குறித்து போலீசில் புகாரளிக்குமாறு நீதிபதி அறிவுரை கூறினார்.
முன்னதாக, புதுக்கோட்டை, திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, நீதிமன்றத்தை தகாத வார்த்தையால் சொல்லி அவமதித்ததாக, ஊடகங்களில் பலரும் போட்டி போட்டு விவாதித்து வருகிறார்கள். போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, 4 வாரத்திற்குள் ஏதாவது ஒரு நாளில் ஹெச். ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சிடி செல்வம், நிர்மல் குமார் அமர்வு கூறியுள்ளது.
முன்னதாக, நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக விசாரிக்க மறுத்தது/




