ஈ.வே.ரா., சிலை மீது செருப்பு வீச்சு: வழக்கறிஞர் கைது

சற்றுமுன் சென்னை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
evr statue - 2026
Pic: File Copy

சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் அருகே உள்ள ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலை மீது செருப்பு வீசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசனை போலிசார் கைது செய்தனர்.

ஆங்கிலேயருக்கு அணுக்கமான கொள்கைகளைக் கொண்ட அமைப்பாக துவங்கப்பட்ட திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த ஈ.வே.ராமசாமி நாயக்கரின் 140-வது பிறந்த நாள் திங்கள் கிழமை இன்று கொண்டாடப்படுகிறது.

இதை அடுத்து, சென்னை, அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலைக்கு பல்வேறு கட்சிகளும் திரண்டு வந்து மாலை அணிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை அந்தப் பகுதிக்கு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் (35) என்பவர், திடீரென ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலை மீது செருப்பை வீசினார். இதைக் கண்டு அங்கே கூடியிருந்த பகுத்தறிவுவாதிகளும் தி.க., தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

jagadesan1 serupppu - 2026

இதை அடுத்து, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசனை காவல்துறையினர் கைது செய்து, அவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

அரை நூற்றாண்டுக்கு முன்னர் ராமர் கடவுளா எனக் கேட்டு, அவரது உருவப் படத்துக்கு காலணி மாலை போட்டும், விநாயகர் உருவத்தை சாலையில் போட்டு உடைத்தும் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் ஏற்படுத்தியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.