
பெரியபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சரகத்திற்குட்பட்ட பெரியபாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து உதவி ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பெரியபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலர்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக காவல் நிலையம் இழுத்து மூடி பூட்டப்பட்டது.
காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சக காவலர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.