கொரோனா: கருணாஸின் தனி பாதுகாவலருக்கு தொற்று!

தமிழகம் பொது தகவல்கள்
karunas 1 - 2026

பிரபல நகைச்சுவை நடிகரும், திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸின் தனி பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல காமெடி நடிகர் கருணாஸ், நந்தாவில் தொடங்கி தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திண்டுக்கல் சாரதி, அம்சமுத்திரம் அம்பானி, சந்தமாமா உள்ளிட்ட சில படங்களை, தயாரித்தும் உள்ளார்.

இவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். கருணாஸ் கடந்த 2016ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவாடைனை தொகுதியில் அதிமுக சின்னத்தில் நிற்க சீட் வழங்கினார்.

இதன் மூலம் அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில் கருணாஸ் எம்எல்ஏவின் தனிப்பாதுகாவலராக உள்ளவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடத்தப்பட் சோதனையில் கருணாஸின் பாதுகாவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கருணாஸ்க்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதா அல்லது அவரது உடல் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.