karur protest
karur protest

கரூர் மாவட்டத்தில் பட்டியல் இன மக்களை தொடர்ந்து இழிவாக பேசி வரும் ஆர் எஸ் பாரதி, தயாநிதி மாறன், டிஆர் பாலுவை கண்டித்து ஆதிதிராவிடர் மக்கள் தங்கள் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர்.

திமுகவை சேர்ந்த ஆர் எஸ் பாரதி, தயாநிதிமாறன், டி ஆர் பாலு ஆகியோர் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசி வருகின்றனர்.

இதனை வன்மையாக கண்டிக்கும் வகையில் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட வ உ சி தெரு,  மத்திய நகரம், தெற்கு நகரம், வடக்கு நகரம், மற்றும் கரூர் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட  50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் முக கவசம் அணிந்து, அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை கடைபிடித்து ஆதிதிராவிடர் பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன் நின்று எதிர்ப்புப் பதாகைகளை காண்பித்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

karur protest
karur protest

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கையும் வைத்தனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending