கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்தல் ரத்தா? சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சொல்வது என்ன?!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
jradhakrishnan
jradhakrishnan

இனி வீட்டில் தனிமைப்படுத்துதல் கிடையாது என்றும், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் நேரடி தொடர்புகளை வீட்டிலேயே தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப் படுவதாகவும், கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் நேரடி தொடர்புகளும் இனி அரசு முகாம்களிலேயே தனிமைப்படுத்தப்படுவர் என்றும் இன்று காலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா உள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என்றும், தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் கூறினார் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.

தனிமைப்படுத்துதல் ரத்து என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறிய நிலையில் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என்று, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்புடையவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் லேசான கொரோனா அறிகுறி இருந்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி அனுமதி அளித்திருந்தது. அவர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

corona chennai
corona chennai

இந்த அறிவுறுத்தலை 80% பேர் மட்டுமே பின்பற்றுவதாகவும், மீதமுள்ள 20% பேர் பின்பற்றுவதில்லை என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அத்துடன் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளும் முறை ரத்து செய்யப்படுவதாகவும், வெளியே சுற்றிய தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

மாநகராட்சி ஆணையர் இவ்வாறு தெரிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்பைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி சென்னையில் கொரோனா உள்ளவருடன் தொடர்பிலிருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் முறை தொடரும் என்று தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

தேவை ஒரு மாதம்! :

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது; மக்கள் முகக்கவசம் அணிவதை கடைபிடித்ததே தொற்று குறைய காரணம்! ஒரு மாத காலம் மக்கள் முகக் கவசம் அணிவதை உறுதியாக கடைபிடித்தால கொரணாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்… என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.