
அப்பாவி இந்துக்கள் மீது வழக்கு போட்டு மிரட்டிய ஆழ்வார்குறிச்சி ஆய்வாளரைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம் அழகப்பபுரம் ஹிந்துக் கோவிலை இடித்த தென்காசி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அப்பாவி ஹிந்துக்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஆபாசமாக பேசிய ஆழ்வார்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமியை கண்டித்தும் இன்று சமூக இடைவெளியுடன் ஆழ்வார்குறிச்சியில் மட்டும் கோட்ட செயலாளர் சுப்பையா தலைமையில் சமூக விலகலை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து குறிப்பிட்ட மாவட்ட தலைவர் வன்னியராஜன், ஒரு வாரத்திற்குள் மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நிச்சயமாக மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.