10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் ஜஹாங்கிர் கைது!

Published:

girl attack image

மதுரையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 56 வயது முதியவர் ஜஹாங்கிர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது..!!!!

மதுரை அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் 56 வயது முதியவர் ஜஹாங்கீர். இவருடைய உறவினர் வீடு அதே பகுதியில் உள்ளது.

இந்த நிலையில் உறவினர் வீட்டிற்கு அவ்வபோது வந்து சென்ற முதியவர், அந்த வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்து பலமுறை பாலியல் வன்புணர்வு சீண்டலுக்கு ஈடுபட்டுத்தியுள்ளார்!

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது சிறுமி நீண்ட நாட்களாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது

அதனைத் தொடர்ந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டிற்கு வந்த 56 வயது முதியவரான ஜஹாங்கீர் சிறுமியை அடிக்கடி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகரத்திற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையிர் ஜஹாங்கீர் மீது போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்

10 வயது சிறுமியை மாதக் கணக்கில் 56 வயது முதியவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img