பொன்னுசாமி ஒரு “டுபாக்கூருங்க” என ன்பேசினார் கேடி.ராஜேந்திர பாலாஜி.
தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி
ஒரு டுபாகூருங்க. அவர் பால் முகவரே அல்ல. அவரது சங்கம் ஒரு டூப்ளிகேட் சங்கம்
என ‘தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கொந்தளிப்புடன்
கூறியுள்ளார் .
‘தனியார் பாலில் ரசாயனக் கலப்படம் இல்லை என்று நிரூபித்தால், அமைச்சர்
பதவியிலிருந்து விலகவும், தூக்கில் தொங்கவும் தயார்’ என அதிரடியாக வீராப்புடன்
பேசிய ‘தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, தனது அமைச்சர்
பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’ எனத் தமிழ்நாடு பால் முகவர்கள்,
தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தொடர்ந்து வலியுறுத்தி
வருகிறார்
இந்த நிலையில் இது குறித்து சிவகாசியில் கேடி .ராஜேந்திர பாலாஜி
செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
என்னை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்யச் சொல்லும் பால் முகவர்கள்
சங்கத் தலைவர் பொன்னுச்சாமி என்பவர் பால் முகவரே அல்ல. அவரது சங்கம் ஒரு
டூப்ளிகேட் சங்கம். அவரு டுபாகூருங்க. தனியார் பால் நிறுவனங்கள் அவரைப்
பணத்தால் விலைக்கு வாங்கி பேச வைக்கின்றன.
தனியார் பால் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட புனே, கிண்டி ஆய்வகங்களுக்குச் சென்று
பால் கலப்படச் சோதனையை தடுத்து நிறுத்துவதாக பல முயற்சிகளில் சில நிறுவனங்கள்
ஈடுபட்டு வருகின்றன. அதையெல்லாம் முறியடித்து காலப் போக்கில் தவறு உறுதி
படுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பாலில் ரசாயனக் கலப்படம் விவகாரத்தில் என்னை தார்மீகப் பொறுப்பேற்று
தனியார் தொலைக்காட்சியில் தோன்றி பதவி விலகச் சொல்லும் முன்னாள் அமைச்சர்
வைகைச் செல்வன், தன் மேல் உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அவ்வாறு
பேசிவருகிறார்
வைகைச் செல்வன் ஐநூறு ரூபாய் பணத்திற்குப் பேசும் கூலிப் பேச்சாளர் என்று
கேடி.. ராஜேந்திர பாலாஜி கூறினார்




