மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாலை நவீன முறையில் சீரமைப்பு!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
IMG WA
IMG WA

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாலை நவீன முறையில் சீரமைப்பு

மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் நேதாஜி ரோடானது, மதுரை மாநகராட்சி திட்டத்தில் நவீனப்படுத்தப்பட்டு, கண் கவர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

IMG WA
IMG WA

மதுரையில் பல கோடி மதிப்பீட்டில் வெளிநாடுகளை போல சாலைகள் சீரமைப்பு, அழகிய கற்கள் பதித்தல், சாலைகளில் நவீன விளக்குகளை அமைத்து எரிய செய்தல் போன்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மதுரை நேதாஜி ரோட்டில் சாலைகளில் ஹாலோ பிளாக்ஸ் அமைக்கப்பட்டும், சாலை ஒரமாக பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக சில்வரினால் ஆன கைபிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கண்கவர் விளக்குகள் அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.