தமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று!

சற்றுமுன் சென்னை தமிழகம்
corona virus
corona virus
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு.
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,216 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 73,728 அதிகரிப்பு.
  • தமிழகத்தில் மேலும் 65 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 1,765 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 78,161 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 4231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,581ஆக உயர்வு கண்டுள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,728ஆக உயர்வு கண்டுள்ளது. அதே நேரம் சென்னையில் தொடர்ந்து 8ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது சென்னைவாசிகளுக்கு சற்று மனநிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.  

அதே நேரம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78,161ஐக் கடந்துள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை:

district wise corona details july
district wise corona details july

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.