பாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
milk van
milk van

மதுரை உசிலம்பட்டியில் இருந்து மதுரை ஆவினுக்கு பால் ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஆவின் பால் லாரி எல்லிஸ் நகர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆவின் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் பால் லாரி, மதுரை ரயில்வே நிலையம் மேற்கு நுழைவாயில் அருகே செல்லும் போது நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.

milk van
milk van

சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த ஓட்டுநரை மீட்டனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார்.

milk van
milk van

விபத்து நடந்த இடத்திலேயே ஓட்டுனர் மதுரை மாவட்டம் பேரையூர் சேர்ந்த முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.