December 5, 2025, 3:01 PM
27.9 C
Chennai

போக்குவரத்து துறை அமைச்சர் குறித்து செய்தி வெளியிட்ட நிருபர் கைது: குவியும் கண்டனங்கள்

arrested - 2025கரூரில் மூத்த நிருபர் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டதாக 15ம் மேற்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் தினமலர்.காம் மற்றும் லோட்டாஸ் டிவி, மதிமுகம் டிவி கரூர் செய்தியாளர் ஆனந்தகுமார் கரூர் நகர காவல்நிலையத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.

கரூர் நகர குற்ற எண்: 702/2018 வழக்கு பிரிவு 294B 203 504/2 506/1 Sec 67 IT Act பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதால் நீதிபதி ரகோத்தாமன் வீரைவு நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் நீதிபதி முன்பு ஆஜராகி ஆனந்தகுமார் உடல்நல குறைவு உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்று நீதிபதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

இதனிடையே கரூர் நிருபர் கைதான விவகாரத்தில் பல தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

செய்தி வெளியிட்டால் ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவின் கீழ் வழக்கா? தினமலர்.காம் செய்தியாளர் கைதுக்கு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் கண்டனம்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்- குறள்
தன்னை இடித்துக்கூறித் திருத்தவல்ல பெரியவர்களின் துணை இல்லாத, பாதுகாவலற்ற மன்னன், பகையாய்த் தன்னைக் கெடுப்பார் யாரும் இல்லாவிட்டாலும் தானே கெட்டழிவான். என்ற குறல் மொழியை அலட்சியம் செய்யும் காட்சிகள் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிகைத்துறை அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் பொறுப்புள்ள துறை. மக்களின் தேவைகள், அரசின் குறைகள், நடக்கும் நிகழ்வுகளை கொண்டுச் சேர்க்கும் கடமை பத்திரிகைகளுக்கு உண்டு. அதை காது கொடுத்து கேட்பதும், குறைகளை களைவதும், மக்கள் பணி செய்வதும் அரசின் கடமை.

ஆனால் ஊடகங்களை முடக்கும் செயலில் ஈடுபடுவதும், மிரட்டுவதும், காவல்துறை மூலம் பொய் வழக்குகள் போடுவதும் தற்போதை அரசு செய்வது ஏற்புடையது அல்ல. பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்கும் விதத்தில் மிரட்டுவதும், சிறையில் அடைப்பதன் மூலமும் எதையும் மூடி மறைத்துவிட முடியாது.

சமீப காலமாக அரசை, காவல் துறையை நீதிமன்றத்தை விமர்சிப்பவர்கள் செல்வாக்குடன் உலா வருவதும் மக்கள் பிரச்சினைகளை எழுதும் பத்திரிகையாளர்களை கைது செய்வது, மிரட்டுவது அதிகரிக்கும் போக்கு இந்த அரசு ஜனநாயக பாதையில்தான் செல்கிறதா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

அமைச்சரின் செய்தியை போட்டதற்காகவும், அந்த செய்தியின் லிங்கை தனது முகநூலில் பதிவிட்டதற்காகவும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பத்திரிகையாளர்மீது புனையப்படுவது தமிழகத்தில் சமீபகாலமாக பார்க்க முடிகிறது. தினமலர் டாட்காம் மூத்த செய்தியாளர் அனந்தக்குமார் கைதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்கி அவரை விடுவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஜனநாயக எண்ணம் கொண்டோர் இந்த கைது நடவடிக்கையை கண்டிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்…. என்று மிதார் மைதீன் (பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம்.) தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா..?, ஹிட்லர், முசோலினி ஆட்சியா…?” -கரூர் மாவட்ட செய்தியாளர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து சமூகவலைதளங்களில் செய்தி வெளியிட்டதாக வந்த புகாரின் பேரில் *இமயம் தொலைக்காட்சியின் கரூர் மாவட்ட செய்தியாளர்* திரு. *ஆனந்தகுமார்* அவர்கள் கைது செய்யப்பட்டு அவர் மீது (கரூர் நகர குற்ற எண்: 702/2018) *294B 203 504/2 506/1 Sec 67 IT Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு* செய்யப் பட்டுள்ளதை *தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.*

மேலும் அண்மை காலமாக *நீதித்துறை குறித்தும், காவல்துறை குறித்தும் தவறான விமர்சனங்களை முன் வைப்பவர்கள் மீதும், பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வோர் மீதும் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் என்கிற காரணத் தினால் கைது செய்யப்படாமல் காவல் துறையினரின் பாதுகாப்போடு சுதந்திரமாக உலா வரும் நிலையில்* மத்திய, மாநில அரசுகளையோ அல்லது *ஆட்சி புரிகின்ற கட்சிகள் குறித்தோ* அல்லது *ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் குறித்தோ விமர்சனம் செய்தால் மட்டும் உடனடியாக வழக்குப்பதிவு செய்வதும், வழக்குப்பதிவு செய்த சில மணி நேரங் களிலேயே அவர்கள் கைது செய்யப்படுவதையும் காண்கையில் ஹிட்லர், முசோலினி போன்ற கொடுங்கோலர்களின் ஆட்சி நமது சுதந்திர இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடைபெறுகிறதோ என்கிற எண்ணம் நம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அரசுக்கு எதிராக, ஆட்சியாளர் களுக்கு எதிராக குரல் கொடுப் போரையும், போராடுபவர்களையும் *காவல் துறை மூலம் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டு விட்டால் கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறித்து உண்மையை உலகறிய செய்யாமல் செய்து விடலாம்* என எண்ணினால் ஏமாறப் போவது ஆட்சியாளர் களாகிய நீங்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே *இமயம் தொலைக் காட்சியின் கரூர் மாவட்ட செய்தியாளர் ஆனந்தகுமார் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெறுவதோடு அவரை எந்தவொரு நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக கைவிடுமாறும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்…என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ. பொன்னுசாமி தெரிவித் துள்ளார்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories