தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டதி தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணியில் மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை பாதிப்பதாகக் கூறி கடந்த மே 22ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக ஆலை மூடப்பட்டது. அந்த ஆலையில் இருந்து ரசாயனக் கழிவு வெளியேறுவதாக ஆலை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அதிகாரிகள் குழு ஒன்று ஆய்வு நடத்திவருவதாகத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தற்போது ஏற்பட்ட கசிவால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



