ஓவியாவின் பெயரை சொல்லி ஏமாற்றிய பிக்பாஸ் நிகழ்ச்சி

ஓவியாவின் பெயரை சொல்லி ஏமாற்றிய பிக்பாஸ் நிகழ்ச்சி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முதல் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் ஆரம்பமானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 16 பேர் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டனர்,

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மகத், டேனியல், வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்தியநாதன், ரம்யா, செண்ட்ராயன், மும்தாஜ், ரித்விகா, தாடி பாலாஜி, மமதி , நித்யா , ஹாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய 16 பேர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்

நேற்றைய இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து ஓவியாவும் ஒரு போட்டியாளர் என்பதுபோல் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் கடைசியில் நான்கு மணி நேரம் கழித்து ஓவியா போட்டியாளர் இல்லை, வெறும் விருந்தினர் என்று கூறி பார்வையாளர்களை ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியை நான்கு மணி நேரம் பார்க்க வைக்க ஓவியாவின் பெயரை சேனல் பயன்படுத்தி கொண்டதாக டுவிட்டர் பயனாளிகள் கூறி வருகின்றனர்.