நெல்லை கடையநல்லூர் அருகே மேலகடையநல்லூரில் டாஸ்மாக் கடையை அகற்ற போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது தீவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுபான கடையை துளையிட்டு மர்மநபர்கள் தீவைத்ததால் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள், பணம் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




