சென்னை பெசன்ட் நகர் எலியேட்ஸ் கடற்கரையில் “பிளாஸ்டிக் இல்லா கடற்கரையை உருவாக்கி கடல் வளத்தை காப்போம்” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீனவர்களுக்கான படகுப்போட்டி நடத்தப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 17அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று துவக்கி வைத்தார். விறுவிறுப்பாக நடந்த போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு நடிகர் பார்த்திபன் பரிசு வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், “அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தங்கு இருப்பதாகவும், நிச்சயமாக அரசியலுக்கு வருவேன்” என்றும் தெரிவித்தார்



