அழகர்கோயிலில் குவியும் கூட்டம்! கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை!

Published:

madurai alagar koil
madurai alagar koil

மதுரை அழகர் கோயிலில் கோட்டைவாசலைத் தாண்டி யாரையும் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது, மதுரை அழகர் கோயில் பக்தர்கள் கோட்டைவாசல் அருகே தங்கள் பிரார்த்தனை செலுத்தி வருகின்றனர். கொரோனா அச்சத்தால், பொதுமக்கள் அதிகம் குவிய அனுமதிக்கக் கூடாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மதுரை திருமாஞ்சோலை எனப்படும் அழகர்கோயில் அரசு உத்தரவுப்படி நடை சாத்தப்பட்டு சுமார் 110 நாட்கள் ஆகிறது. இதனால், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோட்டைவாசல் வாசலிலே, முடி எடுத்தும், தேங்காய்கள் உடைத்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டு வருகின்றனராம். மேலும், கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியும் பின்பற்றப்படுவதில்லை.

alagarkoil
alagarkoil

கோட்டை வாசல் அடைக்கப்பட்டு, தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாத்து வருகின்றனர். யாராக இருந்தாலும், கோயில் பணியாளராகள், அலுவலர்களை தவிர யாரும் அனுமதிக் கூடாது இது தான் சட்டம். இந்த நிலையில், கோட்டை வாசலை தாண்டி, செக்யூரிட்டிகள் முக்கியமானவர்கள் சிலரை அனுமதிப்பதாக சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர்.

மேலும், அழகர் கோயில் வளாகத்தில் தான் பங்குனி உற்சவம், சித்திரை திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், ஆனிமாத உற்சவங்கள் எல்லாமே, பக்தர்கள் இன்றி, நடைபெற்றது. தற்போது , தினசரி நிறைய பக்தர்கள் அழகர்கோவிலுக்கு வந்து கோட்டை வாசலில் உள்ள பரமசுவாமியை வழிபடுகின்றனர். இதனால் கொரோனா தொற்று வாய்ப்பு ஏற்படலாம்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

எனவே, அப்பன்திருப்பதி போலீஸார், அழகர் கோயிலுக்கு வரும் பக்தர்களை கட்டுப்படுத்த வேண்டும் என, இப் பகுதி மக்கள் கோருகின்றனர். இது குறித்து, மதுரை அழகர் கோயில் துணை ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img