சாலையில் அடிபட்ட நிலையில் இளைஞர்… கண்டுகொள்ளாமல் சென்ற ‘பொதுஜனம்’!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
accident-at-madurai
accident-at-madurai

மதுரை மாவட்டம் புதூர் சூரிய நகர் சாலையில் அடிபட்ட நிலையில் கேட்பாரற்று கிடந்த இளைஞர் தன்னார்வு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மதுரை புதூர் காவல் நிலையம் அருகில் சூர்யா நகர் அருகே ஒருவர் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு சாலையில் ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை யாரும் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை.

அவ்வழியாக சுரபி அறக்கட்டளையைச் சேர்ந்த சேது மற்றும் குமார் ஆகியோர் வந்து கொண்டிருந்த போது சாலையில் அடிபட்டு கிடந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த நபர் பெயர் மாரியப்பன் எனவும் அவர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருவதாக அடையாள அட்டையை வைத்து அடையாளம் காணப்பட்டது

இவர் விபத்தில் சிக்கியது இதுகுறித்து புதூர்காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், காயமடைந்து ஒருவர் சாலையில் கிடந்த போது, பொது மக்கள் கண்டும் காணாமலும் சென்றது பெரும் அவலமாகவே பார்க்கப்பட்டது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.