திருப்பதி பெருமாளுக்கு பெயர் தெரியாத பக்தரின் ‘கனத்த’ நன்கொடை!

Published:

thirupathi-gold-gift
thirupathi-gold-gift

திருமலை வெங்கடேஸ்வர சுவாமிக்கு பெயர் தெரியாத பக்தர் ஏராளமான நன்கொடை.

திருமலையின் மீது உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு ஒரு பெயர் தெரியாத பக்தர் மிகப் பெருமளவில் நன்கொடை அளித்துள்ளார்.

ஸ்ரீவாரி நிவேதனமாக 20 தங்க பிஸ்கட்டுகளை சமர்ப்பித்துள்ளார். சனிக்கிழமை உண்டியலை கணக்கெடுப்பு எடுத்த போது இந்த தங்க பிஸ்கட்டுகள் வெளிப்பட்டன. இந்த விஷயத்தை திருமலா திருப்பதி தேவஸ்தானம் எக்சீக்யூடிவ் அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார். ஒரு பிஸ்கட் 2 கிலோ கிராம் எடையோடு கூடியவை. இவற்றின் மதிப்பு சுமார் 16.7 கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.

thirupathi-gold-gift1
thirupathi-gold-gift1

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திருமலை தேவஸ்தானம் மூடப்பட்டிருந்தது. ஜூன் 11ல் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டும் இதுதான் மிகப் பெரிய நன்கொடையாக விளங்குகிறது.

லாக்டௌனுக்குப் பிறகு தேவஸ்தானம் திறந்ததிலிருந்து இன்று வரை சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசித்து கொண்டார்கள். ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து கொண்ட 67 ஆயிரம் யாத்திரீகர்கள் பல்வேறு காரணங்களால் பூஜைக்கு வரவில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் வேகமாக கொரோனா கேசுகள் பரவி வருகின்றன. இதன் தாக்கம் திருமலை கோவில் மீது கூட விழுந்துள்ளது.

ஆலயத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 91 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாக அடையாளம் கண்டுள்ளார்கள். இப்போதுவரை 3569 பேர் ஊழியர்களை கொரோனா பரிசோதனை செய்தார்கள். ஊழியர்களில் கொரோனா வைரஸ் பரவுதலைக் கண்டு பிடித்தபின் நிர்வாகத்தில் மிகவும் அதிக கவனத்தோடு இருப்பதாக கூறினார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img