தமிழகத்தில் இன்று… 4328 பேருக்கு கொரோனா: சென்னையை அடுத்த 3 மாவட்டங்களில் அதிகம்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona virus
corona virus
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்வு.
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,140 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 78,573 அதிகரிப்பு.
  • தமிழகத்தில் மேலும் 66 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 92,567 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 4328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், சென்னையை அடுத்த 3 மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும், திருவள்ளூரில் 337 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும் என மொத்தம் 908 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. 

அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2000ஐக் கடந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2032 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

இன்று ஒரே நாளில் 3,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதை அடுத்து, இதுவரை 92,567 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 

சென்னையை அடுத்து அதிக பாதிப்புள்ள பகுதியாக இப்போது கண்டறியப் பட்டுள்ள மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 

corona-district-wise-july-13
corona-district-wise-july-13

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.