தமிழகத்தில் இன்று 6,785 பேருக்கு கொரோனா உறுதி; 2 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் இன்று 6785 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,99,749ஆக உயர்வு கண்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 6785 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அதே நேரம், தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 6504 பேர் இன்று டிஸ்சார்ஜ்   செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இதையடுத்து தமிழகத்தில்  குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,297ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர்  உயிரிழந்துள்ளனர் இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,320ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று 1299 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,206ஆக உயர்ந்துள்ளது. 

அண்மைக் காலமாக, சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 5486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு!

சென்னை – 1299
விருதுநகர் – 424
செங்கல்பட்டு – 419
திருவள்ளூர் – 378
காஞ்சிபுரம் – 349
மதுரை – 326
தூத்துக்குடி – 313
குமரி -266
தேனி -234
ராணிப்பேட்டை – 222
திருச்சி – 217
கோவை – 189
தஞ்சை-186
க.குறிச்சி-179
வேலூர் -174
நெல்லை-171
விழுப்புரம் -164
தி.மலை – 134
சேலம்-122
திருவாரூர்-96
புதுக்கோட்டை-95
கடலூர்-91
தென்காசி-93
சிவகங்கை-82
கிருஷ்ணகிரி-82
திண்டுக்கல்-80
ராமநாதபுரம்-72
திருப்பத்தூர்-56
நாகை-46
அரியலூர்-37
தர்மபுரி – 36
நீலகிரி -34
ஈரோடு -25
நாமக்கல் -28
திருப்பூர்-18
பெரம்பலூர் – 16
கரூர்-5

மாவட்டவாரியாக இன்று கொரோனா உயிரிழப்பு!

சென்னை -22
மதுரை -10
விருதுநகர் – 6
திருவள்ளூர் -5
குமரி -5
கோவை – 4
நெல்லை – 4
காஞ்சிபுரம் – 4
செங்கல்பட்டு -4
திண்டுக்கல் -3
ராணிப்பேட்டை -3
தென்காசி -2
தி.மலை – 2
தேனி -2
வேலூர்- 1
திருச்சி -1
கிருஷ்ணகிரி-1
நாமக்கல்-1
நாகை -1
சேலம் -1
தூத்துக்குடி -1
திருப்பத்தூர் -1
சிவகங்கை -1
புதுக்கோட்டை -1
திருப்பூர்-1
அரியலூர் -1

இன்று மட்டும் – 88 | இதுவரை மொத்தம் – 3320

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.