December 6, 2025, 3:54 PM
29.4 C
Chennai

கோவிட் மரணங்களை மறைக்கவில்லை: ஸ்டாலின் கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதில்!

madurai-vadipatti-corona-centre
madurai-vadipatti-corona-centre

மதுரை : கோவிட் மரணங்களை மறைக்கவில்லை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படிதான் அறிவிக்கப்பட்டுள்ளது என்று, அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உள்ள கச்சைகட்டியில் காய்ச்சல் முகாமினை தொடங்கி வைத்து அதன்பின் கூட்டுறவு வங்கியின் சார்பில் விவசாயிகளுக்கு 23 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வழங்கியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு  46 லட்சம் கடனுதவி வழங்கியை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்

 இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய்,சோழவந்தான்  சட்டமன்ற உறுப்பினர்கே மாணிக்கம்,மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  எஸ் எஸ் சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட கழக அவைத்தலைவர் ஐயப்பன் ,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல்,  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஐ.தமிழழகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் காசிமாயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது ;

இந்த நான்கு மாதத்தில் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கோவியட் நோயை  கட்டுப்படுத்த வண்ணம் முதலமைச்சர் பல்வேறு போர் கால நடவடிக்கைகளை எடுத்து இரவு பகலாக பாடுபட்டு வருகிறார்

இதுவரை 21லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மாதிரி பரிசோதனை செய்யபட்டுள்ளது இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை  செய்யபட்டுள்ளது 

இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்து 86 ஆயிரம் மேற்பட்டோரை கண்டறியப்பட்டு  இதில் இதுவரை 1,36,793  நபர்களை மருந்தே இல்லாமல் குணப்படுத்தி உள்ளோம் மதுரை மாவட்டத்தில் 8,984 நபர்களை  கண்டறியப்பட்டு அதில் 5,965 நபர்களை குணப்படுத்தி உள்ளோம்

அதேபோல் கிராமப் பகுதிகளில் இந்த தொற்று நோய் ஏற்படா வண்ணம் முதலமைச்சர் கிராமங்கள் தோறும் காய்ச்சல்  முகாமை நடத்த உத்தரவிட்டிருந்தார் அதன்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2,235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது இதில் 1,56,289 மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது  சளி பரிசோதனை 1,10,864 நபர்களுக்கு செய்யப்பட்டுள்ளது

இந்த கொரோனா  பணிக்காக தமிழகம் முழுவதும் இதுவரை  15 ,000க்கு மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளிட்டோரை முதலமைச்சர் நியமித்துள்ளார் மதுரை மாவட்டத்தில்இந்த கொரோனா நோய் பணிக்காக 730 மருத்துவர்களும், 890 செவிலியர்கள், 3,800 களப்பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்

அதேபோல் மக்களின் தற்போதுள்ள உணர்வுகளை உள்வாங்கி முதலமைச்சர் செயல்படுகிறார் கலை மற்றும் அறிவியல், இன்ஜினியரிங் ,பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை ரத்துசெய்து அடுத்த ஆண்டு கல்வி ஆண்டில் சேரலாம் என்று முதலமைச்சர்  அறிவித்துள்ளது ஒட்டுமொத்த பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் 

அது மட்டுமல்லாது உலகமே இந்த நோயின் தாக்கத்தால் இருக்கும்  பொழுது தமிழகத்தின் பொருளாதாரத்தை  உயத்திடும் வண்ணம் இந்த நான்கு மாதத்தில் 30,664 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்த்து இதன்மூலம் 67,222 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கியுள்ளார்

 இப்படி ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தை ஈர்த்து சாதனை படைத்து வரும் நமது முதலமைச்சரையும் செயல்பாட்டினை கண்டு  பொறுத்துக்கொள்ள முடியாமல்  தீய எண்ணத்தின் வடிவமாக இருக்கும் ஸ்டாலின்  கொரோனா இறப்பைப் பற்றி பொய் கணக்கு என்று அரசியல் உள்நோக்கத்துடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

இன்றைக்கு தமிழகம் மட்டும்தான் நாள்தோறும் இந்த தொற்று நோய் குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிடுகிறது எதையும் மூடி மறைக்கவில்லை தமிழக அரசின் செயல்பாட்டை  அனைவரும்  பாராட்டுகின்றனர் 

ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 4,44  கோவியட் இறப்புகள் மறைக்கவில்லை இந்த 4,44நபர்களும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இவர்களுக்கு இணை  நோயினால் இறந்தவர்கள் ஆனாலும் இவர்களை கோவியட் கணக்கில் சேர்க்கலாமா என்று பொது சுகாதார மாநில துணை இயக்குனர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

அதில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி இணை நோய் இருப்பவர்களுக்கு தொற்றுநோய்  ஏற்பட்டு மரணமடைந்தாலும் அது கோவியட் மரணமாக கருதப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி தமிழக அரசு அறிவித்தது

ஆனால் ஸ்டாலின் உண்மை நிலையை அறியாமல் பீதி ஏற்படுத்தும் வண்ணம் மரணத்தில் பொய்க்கணக்கு என்று  அறிக்கை வெளியிட்டுள்ளார்

பொய் கணக்கு எழுதுபவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் பொய்க்கணக்கு எழுதி ஊழல் செய்து அதன்மூலம் இந்தியாவிலேயே கலைக்கப்பட்ட ஆட்சி திமுகதான்

 தினந்தோறும் அம்மா அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள ஸ்டாலின் யார் யாரையோ  எழதி கொடுப்பதை வாசித்துக் கூடப் பார்க்காமல் அப்படியே வெளியிடுகிறார் ஏட்டுச் சுரைக்காய் வீட்டுக்கு உதவாது அதுபோல் ஸ்டாலின் அறிக்கை ஒருபோதும் மக்களுக்கு பயன்தராது என்று கூறினார் 

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories