
தமிழகத்தில் மருத்துவத்துறை மேலும் ஒரு சாதனையாக ஏர் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜ் தகவல்
கோவில்பட்டியில் இன்று அவர் செய்தியாளா்களிடம் சந்திப்பில் ‘தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் திட்டமிட்டு வகுக்கப்பட்டது.
அவருடைய பயணம் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நாடுகளுக்குச் செல்கிறார், எந்தெந்த புரிந்துணா்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார் என்பன உள்ளிட்ட அனைத்தும் ஊடகங்கள் வாயிலாக அனைத்து மக்களும் பார்த்துக் கொண்டுள்ளனா்.
திமுக தலைவா் முக.ஸ்டாலின் பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்.
அது குறித்த என்றாவது ஊடகத்தில் வந்திருக்கிறதா? எதற்காக வெளிநாடு சென்றார்? என்று அவர் தான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவரும் அரசின் ஒரு பங்குதான்
லண்டனில் உள்ள தமிழர்கள், தொழில் நிறுவனங்கள், அங்குள்ள மருத்துவமனை நிர்வாகிகள், தொழில் முதலீட்டாளா்கள் ஆகியோரை முதல்வா் சந்தித்தார்.
அங்கு உள்ளதைப் போல மருத்துமனை ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் தமிழகத்தில் ஏற்படுத்தி, வெளிநாட்டுக்கு இணையான மருத்துவ வசதியை கொண்டு வர வேண்டும் என்று முயற்சி எடுத்துள்ளார்.
இவை அனைத்தும் வெளிப்படையாகத்தான் நடக்கிறது.

இதில் என்ன மர்மம் இருக்கிறது எனத் தெரியவில்லை, அதிமுகவில் இருந்து பிரந்தவா்கள் யாரும் நீடித்தாக வரலாறு இல்லை.
மேலும் தமிழக திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த பல விதிமுறைகளை வகுத்துள்ளோம்.
திரையரங்கு கட்டணங்களை முறைபடுத்தி உள்ளோம்.
வாகன நிறுத்துவதற்கான கட்டணமும் முறைபடுத்தப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரக்கட்டுபாடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திரையரங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் திண்பண்டங்களுக்கும் விரைவில் நியாயமான கட்டணம் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றார். .



