உதவியாளருக்கு கொரோனா; தனிமைப் படுத்திக் கொண்ட ஆளுநர்!

Published:

governor banwarilal purohit
governor banwarilal purohit

உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி 7 நாட்கள் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் 38 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:

38 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. உதவியாளர் தாமஸ் மற்றும் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 7 நாட்கள் தனிமைப் படுத்தி கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய 147 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 84 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து, அங்கு கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் உதவியாளர் தாமஸ் உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இருப்பினும், ஆளுநர் பன்வாரிலால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா உறுதியானதால், ஆளுநர் தம்மை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். இதனையடுத்து அவர் தம்மை  தனிமைப்படுத்தி கொண்டார்…

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img