கறுப்பர் கூட்டத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
sureshkannan - 2026

கறுப்பர் கூட்டம் என்கின்ற கூட்டம் மேல் நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு கருப்பர் கூட்டம் மேல் குண்டர் சட்டம் போடுவதற்கு பதில் தேசிய பாதுகாப்பு சட்டம் பதிய வேண்டுமென்றும் மனித உரிமைகள் கழக தலைவர் சுரேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.

தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில், மனித உரிமைகள் கழகத்தின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஐயப்பத்துரை என்கின்ற ஐயப்பன் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கினர். மேலும் நலத்திட்ட உதவிகள், ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மனித உரிமைகள் கழகத்தின் சார்பில், கரூர் மாவட்டத்தில் சிறப்பாக வழங்கப் பட்டிருப்பதை அடுத்து மனித உரிமைகள் கழகத்தின் மாநில தலைவர் டாக்டர் சுரேஷ்கண்ணன் நேரில் பார்வையிட்டு கரூர் மாவட்ட நிர்வாகிகளை பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் மாநிலத் தலைவர் சுரேஷ் கண்ணன். அப்போது அவர், உலக அளவில் உள்ள பிரச்சினை கொரோனா பிரச்சினை என்பதால், தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதையும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பாராட்டை தெரிவித்த அவர்., மேலும் மத்திய மற்றும் மாநில அரசு ஒன்றிணைந்து ஒரு குடும்பத்திற்கு ரூ 5 ஆயிரம் அல்லது ரூ 10 ஆயிரம் என்று கொரோனா நிவாரண நிதியாக அளித்தல் வேண்டுமென்றார்.

இதுமட்டுமின்றி, கறுப்பர் கூட்டம் என்கின்ற பெயரில் யூடியூப் வெளியிட்டு இந்து மதத்திற்கு பெரும் அவமானத்தினை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கு நன்றியினை தெரிவித்துக் கொண்ட அவர், கருப்பர் கூட்டம் மேல், குண்டர் சட்டம் போடுவதற்கு பதில் தேசிய பாதுகாப்பு சட்டம் பதிவிட வேண்டுமென்றார்.

இதுமட்டுமில்லாமல் வரும் 1 ம் தேதி முதல் தமிழக அளவில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்ட அவர், கொரோனா தொற்று எங்கெல்லாம் அதிகரிக்கின்றதோ, அங்கே மட்டும் தேவைப்படின் உயர் மற்றும் உரிய கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

பேட்டியின் போது., சர்வதேச உரிமைகள் கழகம் தலைவர் வழக்கறிஞர் அசோக்குமார், துணை பொதுச்செயலாளர் சித்ரா., மாநில மகளிரணி துணை செயலாளர் வனஜா ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக தமிழக அளவில் கரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண பணியினை மும்முரமாக எடுத்து சென்று பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களிடம் நற்பெயரை பெற்ற கரூர் மாவட்ட செயலாளர் ஐயப்பத்துரை என்கின்ற ஐயப்பனுக்கு பாராட்டுகளை மாநில தலைவர் சுரேஷ்கண்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.