குமரி மாவட்டத்தில் விநாயக சதுர்த்தி பூஜை கோலாகலம்

சற்றுமுன்
IMG 20170825 WA0021 - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் வினாயகர் சதுர்த்தியை ஒட்டி முக்கிய சந்திப்புகளில்
வினாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 3 அடி முதல் 20 அடி வரையிலான
பிள்ளையார் சிலைகள் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டு பூஜைக்கு
வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளாடிச்சிவிளையில்9 அடி பிள்ளையார் சிலை அமைக்கப்பட்டு இன்று காலை பூஜை
செய்து பொதுமக்கள் திரண்டு வழிபட்டனர்.இதில் குமரிமாவட்ட பாரதிய ஜனதா
துணைத்தலைவர் முத்துராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டார் தரிசனம்
செய்தனர்.

இவ்விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் சிலைகளின்பாதுகாப்பு கருதி முக்கிய
பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக
அமர்த்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.