கன்னியாகுமரி மாவட்டத்தில் வினாயகர் சதுர்த்தியை ஒட்டி முக்கிய சந்திப்புகளில்
இந்துமாக சாபா சார்பில் 3000க்கும் மேற்பட்ட வினாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு
பூஜைகள் செய்யப்பட்டன. .
3 அடி முதல் 20 அடி வரையிலான பிள்ளையார் சிலைகள் பல்வேறு வடிவங்களில்
உருவாக்கப்பட்டு பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன இன்று நாகர்கோவில் அருகேயுள்ள
பட்டசாலியன்விளை ஜங்சனில் இந்து மாகசாபா சார்பில்11அடி சிலை நிறுவபட்ட
இடத்தில் இந்துமாக சபா தேசியத்துணைத்தலைவர் தா.பாலசுப்பிரமணியன் கலந்நுகொண்டு
பிள்ளையார் சிலைக்கு இன்று காலை பூஜை செய்து பொதுமக்கள் திரண்டு வழிபட்டனர்.
இதில் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இவ்விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் சிலைகளின்பாதுகாப்பு கருதி முக்கிய
பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக
அமர்த்தப்பட்டுள்ளனர்.




