தமிழக நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ்: மத்திய அரசு புதிய முடிவு!
சென்னை : தமிழக பொறுப்பு கவர்னராக செயல்பட்டு வரும் வித்யாசாகர் ராவை,
தமிழகத்தின் நிரந்தர கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் ரோசய்யா பதவிக்காலம் முடிந்தது முதல்
மஹாராஷ்டிரா மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் பொறுப்பையும்
கூடுதலாக கவனித்து வருகிறார்.



