இருளின் பிடியில்… காளவாசல் மேம்பாலம்!அவசர கதியில் திறந்ததால் அவலம்!

Published:

kalavasal bridge1 - 2026
  • அவசர கதியில் திறக்கப்பட்ட கன்னியாகுமரி வாரணாசி மதுரை காளவாசல் மேம்பாலம்:
  • இருளில் மூழ்கிக் கிடக்கும் அவலம் :
  • உயிர் சேதம் ஏதும் ஆகும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

மதுரை நகரில் காளவாசல் சந்திப்பில் கன்னியாகுமரி வாரணாசி மேம்பாலம் அண்மையில் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடியால் காணொலிக் காட்சி முறையில் திறக்கப்பட்டது. பணிகள் அனைத்தும் முழுமை பெறாமல், அவசர கதியில் திறக்கப்பட்டதால், இரவு நேரங்களில் போதிய அளவு விளக்கு வெளிச்சம் இல்லாத சூழல்நிலவுகிறது

kalavasal bridge2 - 2026

இந்தக் காரணத்தினால், மாலை 7 மணிக்கு மேலே அதில் செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மேலும், பாலமானது முற்றிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

kalavasal bridge5 - 2026

இந்த மேம்பாலத்தில், விளக்குகள் அமைக்காமல் பாலத்தை திறந்து ஏன் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அல்லது சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்து, உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!
kalavasal bridge3 - 2026

எனவே, விளக்குகள் அமைக்கப் பட்டு பாலம் பயன்படுத்துவதற்கேற்ற வெளிச்சம் ஏற்படுத்தும் வரை, தற்காலிகமாக இரவு நேரங்களில் பாலத்தை மூடுவதே சரியாக இருக்கும் என்பது பொது மக்களின் கருத்தாக இருக்கிறது.

kalavasal bridge4 - 2026

அவ்வாறு இல்லை எனில், இரவில் விளக்கு எரியும் வகையில் உடனடியாக ஏற்பாடு செய்து பொது மக்களின் உயிர் காக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img