கொரோனா: தொல். திருமாவளவன் சகோதரி உயிரிழப்பு!

சற்றுமுன் தமிழகம்
thirumava e1522076664718

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதனிடையே அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி பானுமதிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.