24/09/2020 4:30 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடத்தில் ஆக.9 ஞாயிறு அன்று மாலை கந்த சஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது.

சற்றுமுன்...

பெயர் சுடலை; த/பெ: கட்டுமரம்! இணையத்தில் கலகலக்கும் திமுக., உறுப்பினர் அட்டைகள்!

இந்த நடைமுறையிலேயே, சமூக விரோதிகள், ரவுடிகள் கட்சியில் சேர்ந்துவிட்டிருக்கிறார்களே என்று கேள்வி கேட்ட போது,

திருமலை திருப்பதியில் ஜகன்மோகன் ரெட்டி!

பஞ்சகச்ச வேஷ்டி கட்டும், நெற்றியில் திருநாமமும் தரித்து ஆந்திர முதல்வர் ஜெகன் ஸ்ரீவாருக்கு பட்டு வஸ்திரங்களை

மதுரை அருகே தே.கல்லுப்பட்டியில் மடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு,

மோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்!

மாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது! நொந்துபோன பாஜக., தொண்டர்!
srivilliputhur-jeeyar-mutt-kantha-sashti-kavacha-parayanam
srivilliputhur-jeeyar-mutt-kantha-sashti-kavacha-parayanam

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடத்தில் ஆக.9 ஞாயிறு அன்று மாலை கந்த சஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஜீயர் ஸ்வாமிகள், ஹிந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் வண்ணம் இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் இல்லங்களில் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவச பாராயணம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி பலரும் தங்கள் இல்லங்களில் கந்த சஷ்டி கவச பாராயணம் செய்து வேல் பூஜை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரும், தமது மடத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். அதன்படி, அன்பர்கள் சிலர் மடத்தில் அமர்ந்து சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.

கந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சிக்கு வைணவ ஜீயர் மடத்தில் இடம் கொடுத்தது குறித்து பலரும் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். அதே நேரம், இது குறிப்பிடத் தகுந்த மாற்றம் என்று தங்கள் பாராட்டையும் தெரிவித்தனர்.

முன்னதாக, சைவ ஆதீனங்கள், முருக பக்தர்கள் ஆக.9 ஞாயிறு அன்று கந்த சஷ்டி கவச பாராயணம் வேல்பூஜை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்த போது, அதை ஆதரித்து, இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் ஜீயர் ஸ்வாமிகள். ஆனால், சில தீவிர வைணவ பக்தர்கள் ஜீயர் ஸ்வாமிகளின் இந்த அழைப்புக்கு வருத்தம் தெரிவித்து, அவருக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.

ஆனால், இது இந்து ஆன்மிக ஒற்றுமைக்கான விஷயம் என்று கூறி, விமர்சனங்களை எல்லாம் புறம் தள்ளி, தமது மடத்திலேயே அன்பர்கள் வந்திருந்து சஷ்டி கவச பாராயணம் செய்ய ஏற்பாடு செய்தார் ஜீயர் ஸ்வாமிகள்.

இது குறித்து அவர் குறிப்பிட்ட போது, தாயார் ஆண்டாள் குறித்து வைரமுத்து என்ற கவிஞர் இழிவுபடுத்திப் பேசிய போது சமய பேதம் இல்லாமல் அனைவருமே சேர்ந்து குரல் கொடுத்து போராட்டத்தில் குதித்தனர். அது போல இன்று கந்தனை இழிவுபடுத்தி ஒரு கயவர் கூட்டம் பேசியுள்ளது. ஓர் ஆன்மிக சாதகராக இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நம் கடமை. எனவே நம் மடத்தில் இதற்கு இடம் கொடுப்போம். நீங்கள் வந்து பாராயணம் செய்யுங்கள் என்று அன்பர்களை அழைத்ததாகக் கூறினார்.

அதன்படி, மடத்தில் சமூக ஒற்றுமையோடு தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்து விளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை அன்பர்கள் பாராயணம் செய்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »