ஏப்ரல் 21, 2021, 8:21 மணி புதன்கிழமை
More

  மதுரையில்… சுதந்திர தினவிழா முன்னேற்பாடு கூட்டம்!

  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு

  madurai-meeting-collector-officials
  madurai-meeting-collector-officials

  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர் களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய் தலைமையில் நடைபெற்றது.

  இந்திய சுதந்திர தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா நடைபெறும் ஆயூதப்படை மைதானத்தை தயார்படுத்துதல் விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல் விழாவிற்கு வருகை தருகின்ற பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பயனாளிகளின் பெயர் பட்டியல் தயார் செய்தல்
  சிறப்பாக பணியாற்றக் கூடிய அலுவலர்களை கண்டறிந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவதற்கான பட்டியல்களை தயார் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  மேலும், காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை, தேசிய சமூக நலப்பணி படை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செய்தல். விழா நடைபெறும் இடத்தில் போதுமான அளவில் குடிநீர் வசதி
  போக்குவரத்து வசதி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல் , மேலும் சுதந்திர தின விழாப்பணிகளை வருவாய்த்துறை, கல்வித்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

  சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று மரியாதை செலுத்த சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

  விழா நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுக்கள் பரிசோதனை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதற்கும் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தவும் விழா நடைபெறும் இடத்தில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும் போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

  இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்,
  கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ப்ரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மதுரை வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) ராஜதிலகம் உதவி இயக்குநர் (ஊராட்சி) செல்லதுரை உதவி இயக்குநர் (பேரூராட்சி) எஸ். சேதுராமன் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் லீலாவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »