நான் வந்தா வருவாங்க.. நயன்தாராவுக்காக தாஜா செய்யும் விக்னேஷ் சிவன்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
nayandhara

சினிமாவில் புகழ் பெறும் அனைவரும் ஒரு சில படங்களிலேயே தங்களை தல அஜித் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி கொள்கிறார்கள். அப்படிப் பில்டப் பண்ணி கொண்டாலும் சில நேரங்களில் அவர்களுக்கு மூக்கு உடைய தான் செய்கிறது.

அப்படித்தான் தற்போது நயன்தாராவின் சாயம் வெளுத்து வருகிறது. நயன்தாரா. நடிக்க வந்த புதிதில் சினிமா புரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொண்டார்.

ஆனால் அதை அப்படியே படிப்படியாக குறைந்து தற்போது நடிப்புடன் நிறுத்திக் கொள்வதாக தயாரிப்பாளர்கள் பலரும் பலமுறை இயக்குனர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் முறையிட்டு வருகின்றனர்.

அதற்கு நயன்தாரா சொல்லும் காரணம் என்னவென்றால், நான் புரமோஷனுக்கு வரும் படங்கள் அனைத்துமே தோல்வியை பெறுகின்றன என்பதால் தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்யும் வகையில் தான் நான் வருவதில்லை என தெரிவித்துள்ளார்.

vignesh and nayan

ஆனால் நயன்தாரா பிரமோஷனில் கலந்து கொண்ட படங்கள் நிறைய வெற்றி பெற்றிருக்கின்றன. அதேபோல் சொந்த தயாரிப்பு, நெருங்கிய நண்பர்கள் படம் போன்றவற்றுக்கு தன்னுடைய புரமோஷனை வழங்கி வருகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர்கள், உங்களுக்கு 6 கோடி சம்பளமும் கொடுத்து விட்டு நாயை போல பின்னாடியே சுற்றி புரமோஷனுக்கு கேட்க வேண்டுமா என கோபத்தில் உள்ளனர்.

மேலும் இனி சொந்தப் படத்திலேயே நடித்து கொள்ளுங்கள் என தயாரிப்பாளர்கள் கை விட்டு விட்டார்களாம். இந்நிலையில்தான் விக்னேஷ் சிவனின் ஆறாம் அறிவு வேலை செய்துள்ளது.

விக்னேஷ் சிவன் ரகசியமாக தயாரிப்பாளர்களிடம் போன் பண்ணி, நானும் நயன்தாராவும் கூட வருகிறேன், நான் வந்தால் நிச்சயம் அவர் கூட வருவார் என தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த படத்திற்கு கூட்டி வாருங்கள் அப்புறம் சம்பளத்தை பற்றி பேசிக் கொள்ளலாம் என தெரிவித்து விட்டார்களாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.