குமரியில் ஶ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம் உறியடி உத்ஸவம் உற்சாகம்

சற்றுமுன்
IMG 20170913 WA0036 - 2026

*கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான ஊர்வகளில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா
கொண்டாடப்பட்டது.

இவ்விழாவையொட்டி, கோலாட்டம்,செண்டைமேளம், தேர்பவனி என பல்வகை நிகழ்ச்சிகளுடன்
கிருஷ்ண பகவான் வேடமணிந்து உறியடி நிகழ்ச்சியும் இடம்பெற்றது. நாகர்கோவில்
அருகே உடையப்பன்குடியிருப்பு ஊர்மக்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் நடைபெற்ற
உறியடி விழா பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

கிருஷ்ண பகவான் வேடமணிந்த இளைஞர் மண்கலசத்தில் தயிர் வைக்கப்பட்ட உறியை நீண்ட
நேர முயற்சிக்கு பின் கைப்பற்றும் நிகழ்ச்சி ஆன்மீகம் சார்ந்ததாக மட்டுமின்றி
மக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாகவும் விளங்கியது.

சிறுவர் முதல் பெரியவர் வரையிலான அனைவரும் இந்நிகழ்ச்சியில் ஆரவராதத்துடன்
பங்கேற்றதை காணமுடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.