சசிகலா இருக்கும் சிறையில் திடீர் சோதனை

சற்றுமுன்

பெங்களூரு:

பரப்பன அக்ரஹாரா:சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில், 160 போலீசார் இன்றிரவு,
திடீரென்று ரெய்டு நடத்தினர்.

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலா
அடைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டு, சிறையில் சிறப்பு வசதிகள்
செய்து கொடுத்தது தொடர்பாக ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா பல்வேறு குற்றச்சாட்டுகள்
கூறியிருந்தார். உயர்மட்ட விசாரணையும் நடந்து வருகிறது.

160 போலீசார்

இரண்டு நாட்களுக்கு முன், உள்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, சிறைக்கு சென்று
ஆய்வு செய்தார்.இந்நிலையில், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார்
உத்தரவின் பேரில், வட கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கையா தலைமையில் 160
போலீசார் இன்றிரவு ஒரே நேரத்தில் சிறைக்குள் சென்றனர்.

ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்தனர். கஞ்சா, சீட்டு கட்டுகள் உட்பட
அனுமதிக்கப்படாத பொருட்கள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.