
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள லட்சுமி அம்மாள் புரத்தை சேர்ந்த 40 வயதான சந்திரா என்ற பெண் ஒருவர் அங்குள்ள விவசாய நிலத்தில் மாடுகளை மேய்ப்பதற்காக சென்று உள்ளார்.
பிறகு மாடுகள் மேய்ந்த பிறகு அவற்றை வீட்டிற்கு கொண்டு வர கயிற்றை அவிழ்த்து உள்ளார். அப்போது கயிற்றை அவிழ்க்கும் நேரத்தில் அங்கு பிளாஸ்டிக் டப்பா ஒன்று இருந்து உள்ளது.
அது என்னவென்று பார்ப்பதற்காக சந்திரா அதை கையில் எடுத்து பார்த்து உள்ளார். அப்போது அந்த டப்பாக்குள் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் இடது கையில் இரண்டு விரல்கள் துண்டானது.
இதனை அடுத்து சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் சந்திராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.