இ-பாஸ் ரத்து? தமிழகத்தின் நிலைப்பாடு: ஆர் பி உதயகுமார்!

Published:

rb uthakumar

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது மாவட்டங்களுக்கு இடையிலோ பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் இ-பாஸ் முறையை ரத்து செய்வது சவாலானது என தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் தற்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநிலங்களுக்கு இடையே பயணிக்க எந்த தடையும் விதிக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முதல்வர் ஆய்வு செய்து வருகிறார் என தகவல் வெளியிட்டுள்ளார்

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img