அரவக்குறிச்சியில் திமுக., வேட்பாளராக செந்தில்பாலாஜி! அறிவித்தார் ஸ்டாலின்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

senthil balji - 2026

4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்.

அவர் வெளியிட்ட பட்டியலின் படி,

ஓட்டப்பிடாரம் – காசி விஸ்வநாதன்
சூலூர் – முருகேசன்
திருப்பரங்குன்றம் – டாக்டர் சரவணன்
அரவக்குறிச்சி – செந்தில்பாலாஜி… வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

முன்னதாக, 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் குறித்து  முக.ஸ்டாலின் அறிவிக்கிறார் என்று பெரும் பரபரப்பு நிலவியது. குறிப்பாக, கோவை , சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி வேட்பாளராக அறிவிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் பொங்கலூர் பழனிசாமி ஆதரவாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.  இந்நிலையில் முருகேசன் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

அது போல், அரவக் குறிச்சி தொகுதியில் ஏற்கெனவே செந்தில் பாலாஜி கேட்டு விருப்ப மன் கொடுத்திருந்தார்.  அப்போதே அவர் வேட்பாளராக அறிவிக்கப் படுவது உறுதி என்று கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.