திமுக., வளர்க்கும் ஹிந்தி! பச்சோந்திகளை பண்புள்ளவர்கள் நம்பலாமா?!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

dmk contestant - 2026

ஹிந்தியில் பேசி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர் குறித்து சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியும் தூள் பறக்கிறது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்று, இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு, இரு தலைமுறையை எழ விடாமல் நாசமாக்கிய திமுக., தன் வீட்டுப் பிள்ளைகள் ஆங்கிலமும் இந்தியும் பேச வேண்டும் என்றும், அவ்வாறு பேசினால்தான் மத்தியில் ஆட்சியில் பங்கு வகிக்க முடியும் என்றும் திட்டமிட்டு வேலை செய்தது. அதனை கருணாநிதி தனது கரகர கட்டைக் குரலில் உடன்பிறப்பே கடன் பிறப்பே என்று பேசி பலரின் மூளையை மழுங்கடித்தார்.

இப்போது, அதே திமுக., ஹிந்தியில் பேசி, மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறது. மத்திய சென்னை திமுக., வேட்பாளர் தயாநிதி மாறன், ஹிந்தியில் வாக்கு கேட்டு போஸ்டரே ஒட்டியிருக்கிறார்.

இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது… 

நண்பர்களே…. இந்த வீடியோ பாருங்க.. தீம்கா பேசும் மொழி என்ன மொழி என்று புரிகிறதா ? இவனுகதான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்று உசுப்பேத்தி… தமிழ் மொழியில் அடுக்கு மொழியில் பேசி பேசி … பல தமிழர்களை சாக காரணமாக இருந்த நபர்கள்.. ஆனால் பாருங்க இவனுக நடத்தும் பள்ளிக்கூடம் தமிழ் மொழியே இல்லாத CBSE கல்வி முறை…

இவனுக சொல்லலாம் நாங்கள் ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை… இந்தி திணிப்பைத்தான் எதிர்த்தோம்… அப்படின்னா ஏன் மற்ற மாநிலத்தில் இருப்பது அரசாங்க பள்ளியில் ஹிந்தி கூடாது என்று கூறி போராட்டம் நடத்துனானுக… ? விரும்பும் நபர்கள் படித்து கொள்ளலாம் என்று கூறி இருக்கலாமே… ?

60 வருடமாக தொடர்ந்து தமிழக மக்களை முட்டாளாக்கி வரும் திராவிடம்… திமுகவின் அழிவில்தான் தமிழகத்தின் முன்னேற்றம் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.