‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…

Published:

songs 99 1 - 2026இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது கனவுப்படம் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதி குறித்து ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படத்தை ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. 2015ல் அறிவிக்கப்பட்டு இரு வருடங்களுக்கும் மேலாகத் தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, எகான் இணைந்து நடித்துள்ளனர். மற்றும் சில முக்கியப்பாத்திரங்களில் லிசா ரே, மனீஷா கொய்ராலா,இசையமைப்பாளரும் டிரம்மருமான ரஞ்சித் பரோத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒரு பாடகர் பெரும்போராட்டத்துக்குப்பின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆவதுதான் கதையின் ஒன் லைன் என்று தகவல் பரவியபோது, படத்தின் கதாசிரியரும் ரஹ்மானே என்பதால் இப்படம் ரஹ்மானின் சுயசரிதை என்று செய்தி பரவியது. ஆனால் அச்செய்தியை ரஹ்மான் மறுத்தார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ”நான் தயாரித்து, எழுதியிருக்கும் முதல் படமான ’99 சாங்ஸ்’ என்கிற இசையை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான காதல் படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ’99 சாங்ஸ்’ திரைப்படம் சர்வதேச அளவில், இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும். என் மீது நீங்கள் காட்டும் அன்பு, ஆதரவு மற்றும் உற்சாகத்துக்கு நன்றி” என்று கூறியுள்ளார் இசைப்புயல்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img