வரும் 18ம் தேதி தமிழகத்தில் நடக்கும் லோக்சபா தேர்தலுடன் காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18க்கு மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்ததால் அந்த தொகுதியும் காலியானது.
இந்நிலையில் கடைசி 7 வது கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் மே 19ம் தேதி இந்த 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்காக வேட்பு மனு தாக்கல் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வாபஸ் பெற கடைசி நாள் மே2. இந்நிலையில் இந்த 4 தொகுதிக்கான திமுக வேட்பாளர்களை சற்றுமுன் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி…
அரவக்குறிச்சியில் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
திருப்பரங்குன்றம் – டாக்டர் சரவணன்
ஒட்டப்பிடாரம் – காசி விஸ்வநாதன்
சூலூர் – முருகேசன்.
ஆகியோரை வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்துள்ளது.




