
மீரா மிதுன் நடித்துள்ள வெப் சீரிஸ் sneak peak காட்சிகள் வெளியாகி சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இவர் சண்டைகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி பிரபலமானார். அதன்பின்னர் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு விரைவிலே பிக் பாஸ் வீட்டுக்குள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வெளிவந்த பின்னர் நிறைய படங்களில் நடிக்கப்போவதாக பேட்டி அளித்திருந்தார். இதற்கு முன்பு ஒரு சில படங்களில் துணை மற்றும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது நாளுக்கு நாள் சர்ச்சைக்கு மேல் சர்ச்சைகள் ஆக கிளப்பி வருகிறார்.
சமீபத்தில் நடிகர் சூர்யாவை பற்றி தவறாக பேசி இருந்தார். அவருக்கு நடிக்கவே தெரியாது என்றும் சூட்டிங் ஸ்பாட்டில் பல டேக் எடுப்பதாகவும் கூறியிருந்தார் அதற்கு விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் இவரை எச்சரித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் விஜய் மனைவியையும் சூர்யா மனைவியை பற்றி தவறாக பேசி ஒரு வீடியோவை பதிவிட்டு வந்தார்.
இதற்கு அவரது ரசிகர்கள் மீராவுக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தார்கள். இந்நிலையில் மீரா மிதுன் தற்போது நடித்துள்ள “ட்ரீம் நைட்ஸ்” என்கிற வலை தொடரிலிருந்து ஒரு Sneak peak இணையதளத்தில் வெளியாகி சர்ச்சைகளையும் மோசமான விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
அந்த Sneak peak வீடியோவில் மீராவின் குளியல் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவிற்கு பலரும் கேவலமாக திட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
Super excited for the release next month ? Thanks image & you and producer @kaultheking https://t.co/a82wsEQk1r
— Meera Mitun (@meera_mitun) August 22, 2020