Homeசற்றுமுன்காசி டூ மதுரை... 2,500 கி.மீ., சைக்கிள் பயணத்தில் ‘சிவலிங்கம்’!

காசி டூ மதுரை… 2,500 கி.மீ., சைக்கிள் பயணத்தில் ‘சிவலிங்கம்’!

shivalingam-kaasi-to-madurai
shivalingam-kaasi-to-madurai

காசியில் இருந்து மதுரைக்கு 2,500 கி.மீ. சைக்கிள் பயணம் பயணிக்கும் சிவலிங்கம்

மதுரை குன்னத்தூர் மலையில் சோழர் கால சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான் லிங்கவடிவில் எழுந்தருளி இருந்தார். ஆனால், இந்த கோவிலில் தற்போது சிவலிங்கம் இல்லை. எனவே, கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு, காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதன்படி காசியில் இருந்து மதுரைக்கு சுமார் 2,500 கி.மீ. தூரத்தை கடந்து 3 சக்கர சைக்கிளில் சிவலிங்கம் கொண்டு வரப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை, மதுரை ராஜாக்கூரை சேர்ந்த பாண்டியன், கீரைத்துரையை சேர்ந்த லூர்துசாமி ஆகியோர் சைக்கிளில் திண்டுக்கல் வழியாக கொண்டு சென்றனர்.

அப்போது திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். ஊழியர் குடியிருப்பில் சிவலிங்கத்தை, ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர். அதையடுத்து சிவலிங்கம், திண்டுக்கல்லில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக சிலையை கொண்டு வந்த பாண்டியன், லூர்துசாமி ஆகியோர் கூறும்போது, 185 கிலோ எடை கொண்ட சிவலிங்கத்தை 3 சக்கர சைக்கிளிலும், எங்களுடைய உடைமைகளை சாதாரண சைக்கிளிலும் வைத்து கொண்டு காசியில் இருந்து புறப்பட்டோம்.

திண்டுக்கல்லுக்கு 62-வது நாளில் வந்துள்ளோம். இங்கிருந்து சைக்கிளில் ராமேசுவரம் செல்கிறோம். அங்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்துவிட்டு, பின்னர் மதுரை குன்னத்தூர் கோவிலில் பிரதிஷ்டை செய்ய இருக்கிறோம் என்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,120FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,215FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...