
அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனரும் உரிமையாளருமான அப்பாசாமி உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
1959ஆம் ஆண்டில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்தை உருவாக்கியவர் அப்பாசாமி. 1960களில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு என்ற கலாசாரத்தை முதன் முதலில் உருவாக்கியவர் இவரே.
இன்று, அதன் பின்னர் சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்புகள் பெரிதாக வளர்ந்துவிட்டன. இவர் அமைத்த அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்போதைய இரண்டாவது, மூன்றாவது தலை முறையினர்வசித்து வருகின்றனர். இவரது நிறுவனம் 100க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.
சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் சிறந்ததொரு ரியல் எஸ்டேட் நிறுவனமாக விளங்கி வருகிறது. சென்னை, கோவை கரூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இவர்கள் உருவாக்கிய ரெசிடென்ஸி ஹோட்டல்கள் தென் இந்தியா முழுவதும் விரிவடைந்தது.
மாலத்தீவில் நவீன சொகுசு ரிசார்ட்டுகளையும் உருவாக்கி உள்ளனர். ரியல் எஸ்டேட் துறையில் நம்பிக்கை பெற்றுள்ள நிறுவனமாக தற்போது அவரது மகன் ரவி அப்பாசாமி இந்த நிறுவனத்தை மேலும் வளர்ச்சி அடையச் செய்துள்ளார்.