என்னுடைய திட்டம் இதுதான்… அரசியல் பிரவே சம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.

Published:

என்னுடைய திட்டம் இதுதான்… அரசியல் பிரவேசம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.

லாக்டௌன் நேரத்தில் உதவிச் செயல்கள் மூலம் மக்களிடம் ரியல் ஹீரோவாக பெயர் பெற்றுள்ளார் நடிகர் சோனு சூட்.

தன் உதவி செயல்கள், அரசியலுக்கு வரவேற்பு போன்ற அம்சங்கள் குறித்து அவர் பரபரப்பு கருத்துக்களை கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக் காலத்தில் இவர் பெயர் உதவிச் செயல்களுக்கு மறுபெயராக மாறியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்வதற்காக பஸ்களை ஏற்பாடு செய்தது, உழவு மாடுகள் இல்லாமல் விவசாயம் செய்வதற்கு சிரமப்பட்ட குடும்பத்திற்கு டிராக்டர் வாங்கித் தந்தது, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது… போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதை வென்றுள்ளார் சோனுசூட். எங்கோ யாருக்கோ கஷ்டம் என்ற ஒரு சொல் காதில் விழுந்தால் போதும்… முடிந்த அளவுக்கு உதவி செய்து சோஷியல் மீடியாவில் ஹீரோவாக மாறியுள்ளார் இந்த சினிமா வில்லன்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

சினிமாவில் வில்லன் பாத்திரங்கள் மூலம் மக்களை அச்சுறுத்தினாலும் நிஜ வாழ்க்கையில் தன் சேவை நிகழ்ச்சிகள் மூலம் ரியல் ஹீரோ என்ற விருதினை மக்களிடமிருந்து பெற்றுள்ளார்.

பல நாட்களுக்குப் பிறகு ‘அல்லடு அதர்ஸ்’ என்ற தெலுங்கு சினிமா சூட்டிங்குக்காக ஹைதராபாத் வந்த சோனு சூட்டை திரைப்பட யூனிட் சிறப்பாக பாராட்டி வாழ்த்தியது.

சோனு சூட்டுக்கு ரகசிய அஜெண்டா இருக்கிறது என்றும் அவர் அரசியலுக்கு வருவார் என்றும் கமெண்ட்டு செய்பவர்கள் இல்லாமல் இல்லை. அவர் தனி ஒருவராகவே இத்தனை உதவிகளை எவ்வாறு செய்கிறார் என்று சிலர் கேள்வி எழுப்பாமல் இல்லை.

இந்த பின்னணியில் அவர் ஒரு மீடியாவிற்கு அளித்த பேட்டியில் இது குறித்து கருத்து தெரிவித்தார். முடிந்தவரை தேவையானவர்களுக்கு உதவி செய்வது தான் என்னுடைய நோக்கம் என்று தெளிவாகக் கூறினார். தன்னோடு கூட தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவி கோரி பல இமெயில்கள் வருகின்றன என்றார். அவர்களில் மிக மிகத் தேவை உள்ள யாருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அடையாளம் கண்டு என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன் என்றார்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

‘நீதி கோயல்’ என்ற நண்பர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பஸ்கள் ஏற்பாடு செய்யும்போது உதவி புரிந்தார் என்று கூறினார். அதன்பிறகு தன்னோடு சேர்ந்து பல உதவி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கு பலரும் முன்வந்துள்ளதாக குறிப்பிட்டார். தற்போது இந்தியா எங்கும் பல இளைஞர்கள் தன்னோடு சேர்ந்து பணிபுரிந்து வருவதாகவும் கூறினார். முடிந்தவரையில் அதிகமானவர்களுக்கு உதவி செய்வது தான் தன் நோக்கம் என்றார்.

ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்தால் நம் நாடு மாறி விடும் என்றார்.

கடந்த பத்தாண்டுகளாக நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல அழைப்புகள் வந்தாலும் நான் ஆர்வம் காட்டவில்லை. தற்போதும் எனக்கு அந்த ஆர்வம் இல்லை.

இப்படிப்பட்ட உதவி நிகழ்ச்சிகளில் எந்த ஒருவரும் தனியாக செய்ய முடியாது. நமக்கு நல்ல எண்ணம் இருக்கும் போது நம்மோடு சேர்ந்து பணிபுரிவதற்கு பலர் முன்வருவார்கள். அந்த விதமாகவே பலர் என்னுடைய சேவை நிகழ்ச்சிகளுக்கு உதவி புரிகிறார்கள். என்னிடம் உதவி கோரி வருபவர்களின் பிரச்சினை உண்மையானதா இல்லையா என்ற விஷயத்தை என்னுடைய குழு பரிசீலிக்கிறது. 10 சதவீதம் பேர் பொய் கூறி உதவி கேட்பவர்கள். மீதி 90% பேர் உண்மையானவர்களுக்கு உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சிலர் இந்த வாய்ப்பை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று காரணம் காட்டி உண்மையிலேயே தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்துவது சரியல்ல.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

லாக்டௌனுக்குப் பிறகு எனக்கு சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் கூட மாறி வருகிறது. எனக்கு நடிப்பில் இப்போது செகண்ட் இன்னிங்க்ஸ் ஆரம்பிக்க போகிறது என்று மகிழ்ச்சியாக கூறினார் சோனு சூட்.

Screenshot 2020 10 01 19 02 30 556 com.android.chrome - 2026

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img